Last updated on January 4th, 2023 at 06:52 am

பசு மாடுகளை கடத்தி சென்ற சாரதி உட்பட மூவர் கைது

பசு மாடுகளை கடத்தி சென்ற சாரதி உட்பட மூவர் கைது

-பதுளை நிருபர்-

அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டு சென்ற சாரதி உட்பட மூவர் கைது.

கந்தகெடிய பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கந்தகெடிய பொலிஸார் லொறி ஒன்றை நிறுத்தி லொறியை சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் கால்கள் கட்டப்பட்டு மறைத்து கொண்டு சென்ற மூன்று பசு மாடுகளை கைப்பற்றினர்.

இதன்போது, பசறை மற்றும் நமுனுகுலை பகுதிகளைச் சேர்ந்த 22,27,29 வயதுகளையுடைய சாரதி உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கந்தகெடியவில் இருந்து பதுளைக்கு பசு மாடுகளை கொண்டு செல்வதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க