
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் ஹொரோயினுடன் கைது
-பதுளை நிருபர்-
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 5,610 மில்லி கிராம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமேவெல 4 ம் கட்டை பகுதியில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த 22 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்த பசறை பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடம் இருந்து 5,610 மில்லி கிராம் ஹொரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.