கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று வியாழக்கிழமை  இரவு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிநடத்தலில் விடுமுறையில் இருந்த கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கல்முனை மஹ்மூத் பெண்கள் பாடசாலைக்கு அருகில் வைத்து கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக கொண்டு சென்ற 35 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைதான சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 6 கிராம் 680 மில்லி கிராம் உட்பட கேரளா கஞ்சா 1 கிராம் 900 மில்லி கிராம் 29700 ரூபா பணம் ஒரு கைத்தொலைபேசி உள்ளிட்டவைகள் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.