போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் நேற்று புதன்கிழமை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.
இதன் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்தவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஆறுகால் மடம் பகுதியை மையமாக வைத்து இந்த போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.