கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் இன்று புதன்கிழமை கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.