சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வெலிவேரிய ஹெனகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பயன்படுத்த அனுமதி பெறாத இந்த அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பாகங்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் பொருத்தப்பட்டு விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்