
சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
-யாழ் நிருபர்-
வயாவிளான் – குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது உழவு இயந்திர சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரங்களும் சுண்ணாம்புக்கல்லுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
