
கசிப்புடன் முதியவர் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக 3 லீட்டர் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட கசிப்புடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
