
முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு மாணவர்கள் கைது
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
பேராசிரியரின் மகன் செலுத்திய கார், கடந்த10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவத்தை அடுத்து, பேராசிரியரின் வீட்டை சுற்றிவளைத்த குழுவினர் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
