வைத்தியசாலையின் ஐசியூ பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழப்பு
இந்தியா-ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையின் ஐசியூ பிரிவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தப் பிரிவில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த வைத்தியசாலையில் வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர், என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.


