ஹட்டன் வெதுப்பகம் தொடர்பான செய்தி : பகிரங்க மன்னிப்பு கோரல்

ஹட்டன் நகரின் வெதுப்பகம் ஒன்றில் வாங்கிய பாணில் மனித விரல்களில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருந்ததாக கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி அன்று எமது ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றோம்.

குறித்த காணொளி செய்தியில் ஹட்டன் நகரை காட்ட முற்பட்ட நிலையில் வெதுப்பகம் ஒன்றின் காணொளி தவறுதலாக காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குறித்த காணொளி உடனடியாக நீக்கப்பட்டது. இது எமது செய்திப்பிரிவில் ஏற்பட்ட தவறு என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றோம்.