போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை
-யாழ் நிருபர்-
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
நேற்று செவ்வாய்கிழமை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் போதைவஸ்து பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடாத்தப்பட்டது.
யாழில் உள்ள எட்டு பாடசாலைகளில் குறித்த கூட்டம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இறுதி விழிப்புணர்வு கூட்டமானது மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.
இதில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.