மற்றுமொரு சிறுமி மீதும் கொடூரத் தாக்குதல்

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, அதனை மறைத்தமையால் சிறுமி மீது  இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்