சுற்றுலா பயணிகள் மீமுரேவுக்கு வர வேண்டாம் என அறிவிப்பு
ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.
இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.
மாவட்ட செயலாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பழுதுபார்ப்பதற்காக பாலத்தின் அடிப்பகுதியில் ஒரு கல் தோண்ட வேண்டியிருந்தது.
இதன் காரணமாக, பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணங்களுக்கு வருபவர்கள் மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இது 3 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.