அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவுகளை நாளை வியாழக்கிழமை அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

முதலாம் கட்டப் பயனாளிகள்: 1,408,635 குடும்பங்களுக்கு 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிகமான நிதி வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டப் பயனாளிகள்: இரண்டாம் கட்டத்தில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான நிதி நாளை வைப்பிலிடப்படவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, மாதாந்தம் இந்த நலன்புரித் திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.