க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவித்தல்!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள், ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று, பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும், என்று அவர் மேலும் கூறினார்.

அதன்படி, முதல் கட்டம் மார்ச் 12 முதல் 23 வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 வரையிலும் நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.

செயல்முறை பரீட்சைகள், ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செயல்முறை பரீட்சைகள் நிறைவடைந்தவுடன், பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான திகதி முடிவு செய்யப்படும் என்று, பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.