கையும் களவுமாக பிடிபட்ட வயோதிபர்

-யாழ் நிருபர்-

நேற்று ஞாயிற்றுக்கிழமை புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தில் வயோதிபர் ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிசென்று விற்பனை செய்துள்ளார்.

திருடிய துவிச்சக்கர வண்டியை விற்று விட்டு பின்னர் தனது சொந்த துவிச்சக்கர வண்டியினை எடுக்க வந்த சந்தர்ப்பத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 கையும் களவுமாக பிடிபட்ட வயோதிபர்
கையும் களவுமாக பிடிபட்ட வயோதிபர்