
தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை பலி
கண்டியில் தேங்காய் தலையில் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தந்தை குறித்த குழந்தையை பக்கத்து வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீட்டின் முன்புறம் முப்பது அடி உயரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து காய்ந்த தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.
பின்னர் குறித்த குழந்தையை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிர் இழந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
