
பழ நெடுமாறன் ஐயாவின் கருத்தினால் இராணுவம் எமது மக்களை அடக்கி ஆள முயற்சிக்கின்றது
-அம்பாறை நிருபர்-
தேசிய தலைவர் வருவார் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதானது இலங்கையில் வாழக்கின்ற தமிழர்களை அடக்கி ஆழ்கின்ற நிலையினை உருவாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்.
பழ நெடுமாறன் ஐயா போன்றவர்களது கருத்தினால் இராணுவம் எமது மக்களை அடக்கி ஆள முயற்சிக்கின்றது.
தேசிய தலைவர் உயிருடன் இருக்கின்றார், அவர் வெளிப்படுவார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.எமது மக்களுக்கான பணியினை தேசிய தலைவர் முன்னெடுக்க வேண்டும்.
அவர் உரிய நேரத்தில் வருவார் என்று நம்புகின்றோம், அவருடன் இணைந்து எமது மக்களுக்காக வாழ தயாராக இருக்கின்றோம், எமது தலைவரை அன்பாக நேசித்தவர்கள் நாங்கள், இன்று சிலர் தலைவரை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள், அதனை அவர்கள் நிறுத்த வேண்டும் என தெரிவிக்க விரும்புகின்றேன், என்றார்.
