LGBTQ இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு

கொலராடோவில் உள்ள LGBTQ  இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று திங்கட்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக, அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிகளை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான உரிமை குறித்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

சந்தேக நபர் 22 வயதான Anderson Lee Aldrich என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.