அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கைகளை “புரளி” (hoax) என நிராகரித்துள்ளார். AI துறைக்கு மேலும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் தேவை என்ற கோரிக்கைகளையும் அவர் எதிர்த்துள்ளார்.
AI நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில், அதிநவீன AI அமைப்புகளால் ஏற்படக்கூடிய அபாயங்களை கட்டுப்படுத்த சுயாதீன ஆய்வுகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. Anthropic நிறுவனத்தின் Dario Amodei, OpenAI-யின் Sam Altman உள்ளிட்டோர் AI வளர்ச்சியில் அதிக எச்சரிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், அமெரிக்காவின் AI முன்னிலை பாதிக்கப்படக்கூடாது என்றும், அதிகப்படியான கட்டுப்பாடுகள் சீனாவுக்கு சாதகமாக அமையக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். AI நிறுவனங்களை கண்காணிக்கவும், தவறான பயன்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்காவிடம் ஏற்கனவே போதுமான கட்டுப்பாட்டு முறைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.










