ரணிலுடன் இணக்கமா அது நடக்காது ! – சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கம் காணவுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொரு நிகழ்வு ஒருபோதும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

“சில ஊடக நிறுவனங்கள் பொய்யான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர்” அரசாங்கத்திடம் இருந்து பண வெகுமதிகளை பெற்றுக்கொண்டு அவ்வாறு செய்கின்றனர் என பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.