பாம்பு தீண்டிய குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

-மஸ்கெலியா நிருபர்-

பாம்பு தீண்டிய ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம், இன்று புதன்கிழமை காலை 10:30 மணியளவில், நுவரெலியா மாவட்ட ரம்பொடை ‌வெதமுல்ல தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய குறித்த நபர், தேயிலை செடியின் கீழ் பகுதியில் உள்ள புற்களை அகற்றி கொண்டிருந்த போது, விரியன் பாம்பு அவரை தீண்டியுள்ளது என தெரிய வருகிறது.

குறித்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்