ஜன நாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானது!

ஜன நாயகன் திரைப்படத்தின், 3 மணி நேர முழு படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக வெளியாவதில் சிக்கல்கள் நிலவியது.

இந்தநிலையில் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

சட்டவிரோதமாக இணையத்தில் முழு படமும் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது குறித்து முறைப்பாடு அளிக்கப்படுவதுடன் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.