புதிய சாதனை படைத்த நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம்
நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் அறிமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 4 மணியளவில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை திறந்தார்.
திறந்து இரண்டு மணி நேரத்திற்குள், நடிகர் விஜய்யை 1 மில்லியன் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
இந்த கணக்கு வெறும் 99 நிமிடங்களில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்துள்ளது.
BTS V (53 நிமிடங்கள்) மற்றும் ஏஞ்சலினா ஜோலி (59 நிமிடங்கள்) ஆகியோருக்குப் பிறகு, 1 மில்லியன் பின்தொடர்பவர்களை உலகளவில் எட்டிய மூன்றாவது வேகமான Instagram கணக்கு இதுவாகும்.
நடிகர் விஜய்யின் @actorvijay Instagram கணக்கு 2 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டி தற்போது 4.2 மில்லியனாக உள்ளது.