உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 17 வயது சிறுவன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-தோப்பூர் பகுதியில் உழவு இயந்திர ரொடரியில் சிக்குண்டு 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.

குறித்த சிறுவன் உழவு இயந்திர ரொடரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அதற்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த அமீர் அலி அசாத் (17வயது) எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.