விபத்தில் படுகாயமடைந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்-

 

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு ஆழியவளையை சேர்ந்தவரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகச்சந்திரன் பிரகலதன் (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க