திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நேற்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துடன் முச்சக்கர வண்டி பின்புறமாக சென்று மோதியுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை முச்சக்கர வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக் குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.