20 அடியின் கீழ் கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளான லொறி
மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு திம்புல – பத்தனை டெவோன் கால்வாயில் கவிழ்ந்ததில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹட்டன் – கொட்டகலை யாடன் சைட் தோட்டத்திற்கு செல்லும் பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த லொறி சுமார் 20 அடி கீழ் கால்வாயில் விழுந்துள்ளது.
எனினும், லொறியின் பின்னால் பயணித்த இருவருக்கு காயம் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் திக் ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.