
முட்டை ஏற்றி வந்த வாகனம் விபத்து : இளைஞர் உயிரிழப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கப்ரக வாகனம் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி பயணித்த சிறிய ரக கப்ரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் மோதுண்டத்தில் முட்டை வாகனத்தின் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சிவைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த இருவரில் வாகனத்தின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பளை வேம்போடுகேணி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்வரன் சாரங்கன் (26 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார் .
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
