மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து
-கல்முனை நிருபர்-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறி ஒன்றும் மோதிக்கொண்டதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஜிகரன் என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.