மின்கசிவு காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்
-யாழ் நிருபர்-
யாழ்-ஊரெழு பகுதியில் நேற்று புதன்கிழமை மதியம் வீடு ஒன்று மின்சார கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் உடைகள், உடைமைகள், புத்தகங்கள், பாத்திரங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
வீடு தீப்பற்றி எரிந்ததையடுத்து அயலில் உள்ளவர்கள் சுமார் மூன்று மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், இச்சம்பவம் குறித்து மின்சார சபையினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.