மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்
-திருகோணமலை நிருபர்-
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தால் பயணித்த பெண் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.