
முந்திச்செல்ல முற்பட்ட வேளை விபத்து
-கிளிநொச்சி நிருபர்-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வான் ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இன்று வியாழக்கிழமை, ஏ9 வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதிஸ்டவசமாக எவருக்கும் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
