
யாழில் ஐந்தாவது தடவையாக தூக்கிட்டவர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்ய தொடர்சியாக முயற்சித்து வந்த இளைஞர், ஐந்தாவது தடவையாக நேற்று சனிக்கிழமை தூக்கிட்ட போது உயிரிழந்துள்ளார்.
சென் செபஸ்டியார் வீதி, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர், இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற வேளை, அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
