மழையில் நனைந்த பெற்றோருக்கு குடை எடுத்து சென்ற யுவதி மின்னல் தாக்கி உயிரிழப்பு!
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, மழை காரணமாகக் குடையை வழங்கச் சென்றபோதே, இந்த யுவதி துரதிஷ்டவசமான முறையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த, சமோதி மல்ஷானி (வயது 23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக, அடையாளம் காணப்பட்டுள்ளார்.
