
ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு யுவதி
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை தவறி விழுந்த வெளிநாட்டு பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஒஹிய – பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 19ஆவது சுரங்கப் பகுதியிலேயே குறித்த பெண் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த யுவதி ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
