நாடு திரும்ப காத்திருந்த இலங்கைப் பெண் ஒருவர் ஓமானில் உயிரிழப்பு

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சுரக்ஷா தங்கும் விடுதியில், இலங்கை திரும்ப எதிர்பார்த்து தங்கியிருந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மஹவ – தலதாகம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

மேலும், குறித்த பெண் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.