மதவாச்சியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

மதவாச்சி – மஹதிவுல்வெவ  அடவீரகொல்லேவ பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் இன்று சனிக்கிழமை அதிகாலை மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்