மட்டக்களப்பில் 105 கசிப்பு போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு-கல்லடி வேலூர் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில், 105 கசிப்பு போத்தலுடன் பெண் ஒருவரை, இன்று வியாழக்கிழமை கைது செய்ததாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி ஜி.ம்.பி.ர பண்டார தலைமையிலான குழுவினர், கசிப்பு விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.