திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-மூதூர் நிருபர்-

மூதூர் -அறபாநகர் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.

சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி பயணிக்கும்போதே முச்சக்கர வண்டி திடிரென தீப்பற்றியதாக தெரியவருகிறது.

பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் முச்சக்கர வண்டி பெருமளவில் தீப்பற்றி சேதமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.