யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், திடீரென தீப்பற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம், இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் தாங்கி, உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்பி முயற்சித்தது.

இதன்போது தீடீரென விபத்து ஏற்பட்டது.

குறித்த தீ விபத்தில், 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரியவருகிறது.

கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.