சுவிட்சர்லாந்தில் வேகக் கட்டுப்பாட்டு கமெரா தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது
சுவிட்சர்லாந்தின் சுவைஸ் மாநிலத்தில் இம்மன்சே பகுதியில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு அளவீட்டு உபகரணம் (கமெரா) இனம் தெரியாத நபர்களினால் நேற்று வியாழக்கிழமை இரவு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவுக்குப் பின்னர் ஏ4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேக அளவீட்டு அமைப்பு தீப்பிடித்து எரிவதாக பலர் மாநில பொலிஸ் நடவடிக்கை மையத்திற்குத் தெரிவித்தனர். உடனடியாக அழைக்கப்பட்ட தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீவிபத்தினால் வேக அளவீட்டு அமைப்பு மிகமோசமாக சேதமடைந்ததுள்ளதோடு இதன் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தீ வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை. மக்கள் சந்தேகத்திற்கிடமான அவதானிப்புகள் தொடர்பாக மாநில செயல்பாட்டு மையத்தை 041 819 29 29 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் பொது மக்களை கேட்டுக் கொள்கின்றார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்