52 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு

இராட்சத பாம்புகள் மனிதர்கள் விழுங்கி சாப்பிடும் நிகழ்வுகளை அனகொண்டா போன்ற திரைப்படங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இதுபோன்ற அதிர்ச்சிக்குரிய உன்மை சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியா அடர் மழை காடுகள் கொண்ட நாடாகும். எனவே, அங்கு விவசாய மற்றும் தோட்ட தொழில் பெரும்பான்மை வேலையாக உள்ளது. தற்போது இரப்பர் தோட்ட விவசாயம் அங்கு பிரதான தொழிலாக உள்ளது.

அந்நாட்டின் ஜம்பி என்ற பகுதியில் ஜாஹ்ரா என்ற 52 வயது பெண்மணி இரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார். கடந்த வாரம் அவர் தனது அன்றாட வேலைக்கு சென்ற ஜாஹ்ரா வீடு திரும்பவில்லை. இதனால் ஜாஹ்ராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் காட்டுப்பகுதியில் தேடி பார்த்து பொலிசாரிடமும் புகார் தந்துள்ளனர்.

மனைவி கிடைக்காத நிலையில், அடுத்த நாளும் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தேடிய போது அங்கு ஒரு 22 அடி ராட்ச மலைப்பாம்பு பெரிய வயிற்றுடன் தென்பட்டுள்ளது. அவர்களுக்கு சந்தேகம் வரேவ அந்த பகுதியை சுற்றி தேடியுள்ளனர். அப்போது ஜாஹ்ராவின் உடைகள் மற்றும் உடமைகள் அங்கு சிதறியிருந்துள்ளது.