மரண குழியில் இருந்து பொலிஸாருக்கு சென்ற தொலைபேசி அழைப்பு

அமெரிக்கா வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன், அவரின் கணவர் கத்தியால் குத்தி தன்னை குழியில் போட்டுப் புதைத்து விட்டதாகக் கையில் கட்டிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்குக் கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, காவல்துறை அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்குள்ளேயே அவர் தானவே கட்டை அவிழ்த்து குழியிலிருந்து போராடி வெளியில் வந்துள்ளார். அவரைப் படுகாயங்களுடன் உடலில் டேப் வைத்துக் கட்டிய அடையாளங்களுடன் காவல் துறையினர் மீட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கணவர் தான் இப்படி ஒரு காரியம் செய்தது என்று தெரிய வந்துள்ளது. 53 வயதான சே கியோங் என்ற அவரின் கணவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த காரணத்தினால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 16ம் தேதி இருவருக்கும் இடையே பண தகராற்றில் பெரிய சண்டை வந்துள்ளது. அப்போது என்னுடைய ஓய்வு ஊதிய பணத்தை உன்னிடம் கொடுப்பதை விட உன்னை கொல்லுவதே சரி என்று அவர் கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.