வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் விபத்து
-பதுளை நிருபர்-
லுணுகலை பசறை வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அசேலபுர, ஹிந்தகொட பகுதிகளை சேர்ந்த 49, 50 வயதுடைய இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
லுணுகலையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் வீதியை விட்டு விலகியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது இருவர் பலத்த காயமடைந்த நிலையில் ஹொப்டன் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
