இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா, மதுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்லந்த பொலிஸாருக்கு நபர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்