மட்டு.ஆரையம்பதியில் ஹார்ட்வெயர் கடையினுள் புகுந்த சொகுசு கார்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள ஹார்ட்வெயர் கடையினுள் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து கடையினுள் புகுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதான வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் கார் புகுந்ததால் கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,

காருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் ஆரையம்பதி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த பெயிண்ட் கம்பெனி ஒன்றின் விற்பனை பிரதிநிதிக்குச் சொந்தமான கார் ஒன்றே கடைக்கு முன்னால் உள்ள யூ வளைவில் திரும்ப முற்பட்டபோது வாகனத்தின் உதிரிப்பாகமொன்று உடைந்ததன் காரணமாக வாகனத்தை நிறுத்த முடியாமல் போனதால் கடைக்குள் புகுந்துள்ளது.

மேலும் கடையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் காருக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளமை. குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்