நகரில் உலாவும் காட்டுப்பன்றிக் கூட்டம்

மஸ்கெலியா, நல்லத்தண்ணி நகருக்கு அடிக்கடி வரும் காட்டுப்பன்றிக் கூட்டங்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிவதால் அதிகாலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அதிகளவில் ஆபத்துக்குள்ளாக நேரிடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கூட்டமாக உணவு தேடி வீதிகளிலும், கிராமங்களிலும் அடிக்கடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், காட்டுப்பன்றிகளை அப்பகுதியிலிருந்து விரட்ட வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்