தேசிய சுற்றுலா பயணிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை
இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக இந்திய
நேற்று புதன்கிழமை பிற்பகல் இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேச மங்கையர்க்கரசி தலைமை தாங்கினார். இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள இந்து மதஸ்தலங்களுக்கும் இந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் குழு செல்லவிருக்கிறது.
எதிர்வரும் 06 மாதங்களில் இலங்கையில் உள்ள இந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக வரவுள்ளதாக சுற்றுலா ஏற்பாட்டுக் குழுவின் திரு.லிட்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

